டொமினிக்கன் அமைச்சர்சுட்டுக் கொலை| Dinamalar

சான்டோ டொமிங்கோ:வட அமெரிக்காவில், கரீபிய கடல் தீவு நாடான டொமினிக்கன் குடியரசின் அதிபராக லுாயிஸ் அபினாடர் உள்ளார்.
இவரது அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சராக ஆர்லாண்டோ ஜார்கே மெரா, 55, பதவி வகித்து வந்தார். இவர் முன்னாள் அதிபர் சால்வதோர் ஜார்கே பிளாங்கோவின் மகன். இவரது சகோதரி, துணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். மகன், எம்.பி.,யாக உள்ளார்.
செல்வாக்கு மிகுந்த அரசியல் குடும்பத்தை சேர்ந்த ஜார்கே, தன் நெருங்கிய நண்பரான பவுஸ்டோ மிகேல், 57, என்பவருடன் தன் அலுவலகத்தில் நேற்று முன் தினம் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அமைச்சர் ஜார்கேவை நோக்கி துப்பாக்கியால் பலமுறை சுட்ட மிகேல், அங்கிருந்து தப்பி, அருகில் இருந்த தேவாலயத்திற்கு சென்றார்.
அங்கு, பாதிரியாரிடம் துப்பாக்கியை அளித்துவிட்டு பாவ மன்னிப்பு கோரினார். சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீசார் மிகேலை கைது செய்தனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.