சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து முடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.
இதில் தனுஷுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் அனிருத் – தனுஷ் இணைந்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் படம் ஜூலை 1 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், நாளை இதன் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு கூறியிருப்பது தனுஷ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது கூடுதல் தகவல்.