பெரும்பாலான நபர்கள் தினசரி முட்டை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
இதில் உடலுக்கு தேவையான விட்டமின் பி2, விட்டமின் பி12, விட்டமின் டி, செலீனியம், ஐயோடின், ஃபோலேட் மற்றும் புரதம், கால்சியம் உள்ளிட்ட சத்துகள் அடங்கிய முட்டைகள் நம் உடலுக்கு ஆரோக்கியமானது தான்.
இருப்பினும் இதனை ஒரு சில உணவுகளோடு சேர்த்து சாப்பிட கூடாது. ஏனெனில் இது ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
அந்தவகையில் முட்டையுடன் சேர்த்து சாப்பிட கூடாதா உணவு பொருட்கள் என்ன என்பதை பார்ப்போம்.
- முட்டையில் உள்ள புரதம் சோயாபீன் பாலில் உள்ள டிரிப்சினுடன் இணையும். அதன்படி இந்த இரண்டு கலைவையும் நமது உடல் புரோட்டின் உறிஞ்சுவதை தடுக்கிறது கூடவே உடல்சிதைவு பிரச்சனையை ஏற்படுத்தும்.
- முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகுகிறது. மேலும் முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை இவை உடைக்கும். நச்சுத்தன்மையுள்ள இந்த சேர்மத்தை உறிஞ்சுவது மிகவும் கடினம், மேலும் இரத்தம் உறைந்து போகும்.
- முட்டை மற்றும் பன்றி இறைச்சி இரண்டிலுமே அதிக புரோட்டீன் மற்றும் கொழுப்புக்களைக் கொண்டவை. இவற்றை ஒன்றாக உண்ணும் போது எவ்வளவு விரைவில் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறதோ, அதே வேகத்தில் உடல் ஆற்றலைக் குறைத்து, சோம்பேறியாக்கிவிடும்.
- ஆப்பிள், பேரிக்காய், திராட்சை, பிளம்ஸ், ஆப்ரிகாட், மற்றும் தர்பூசணி போன்ற பழங்களுடன் முட்டை உள்ளிட்ட புரதப் பொருட்களுடன் சாப்பிட கூடாது. முட்டையுடன் இந்த பழங்களை சேர்த்து சாப்பிட்டால் செரிமான மண்டலத்தில் சிக்கல் ஏற்படலாம். எனவே இதை சேர்த்து சாப்பிட கூடாது.
- உருளைக்கிழங்குடன் முட்டை சேர்த்து சாப்பிட கூடாது. ஏனெனில் உருளைக்கிழங்கில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் முட்டையில் உள்ள கால்சியம் மற்றும் இரும்பு சத்தை நம்முடைய உடலானது உறிஞ்சுவதை தடுக்கிறது. இவை செரிமானத்தை மிகவும் தாமதமாக்கி அஜீரணத்தை ஏற்படுத்தும்.