கோடைக்காலத்தில் தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக மின் பயன்பாடு இருப்பது தெரியவந்துள்ளது.
நடப்பாண்டின் கோடைக்காலத்தில் தமிழகத்தில் மின்தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுகிறது. இதில் இதுவரை இல்லாத வகையில், புதிய உச்சமாக கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி 17 ஆயிரத்து 563 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாக மின்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதே சமயத்தில், தமிழகத்தின் மொத்த மின் தேவையில் சென்னை மட்டும் 25 சதவிகிதம் பயன்படுத்தியதும், இது முந்தைய காலங்களைவிட 5 சதவீதம் அதிகம் என்பதும் தெரியவந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக கடந்த மே 4-ம் தேதி 3 ஆயிரத்து 716 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாகவும், சராசரியாக நாளொன்றுக்கு 3 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரத்து 600 மெகாவாட் மின்சாரம் தேவையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுவே முந்தைய ஆண்டுகளில் கோடையில் சென்னையின் மின்சார தேவை 3 ஆயிரத்து 100 மெகவாட் என்ற அளவிலேயே இருந்ததாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கோடையில் நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM