வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் இந்திய உணவகம் ஒன்றில் தமிழில் ‘ஆர்டர்’ கொடுத்ததால் நெகிழ்ந்துபோன உரிமையாளர், அவருக்கு இலவசமாக உணவு வழங்கியது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அமெரிக்காவில், ஸியோமா என்பவர் உணவுகளை ருசித்து, அதை ‘யு டியூப்’ வலைதளத்தில் பதிவேற்றி வருகிறார். இவர், சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள ஒரு இந்திய உணவகத்திற்குச் சென்று தமிழில் உணவுகளின் பெயரைக் குறிப்பிட்டு எடுத்து வரச் சொல்லியுள்ளார்.
அமெரிக்கர் ஒருவர் தமிழில் பேசி உணவு கேட்டதால் நெகிழ்ச்சி அடைந்த உணவக உரிமையாளர், ஸியோமாவுக்கு இலவசமாக உணவு வழங்கியுள்ளார். இந்த நிகழ்வு யு டியூபில் பதிவேற்றப்பட்ட பின், 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். இது குறித்து ஸியோமா கூறியதாவது:
உலகின் மிகப் பழமையான மொழிகளில் தமிழும் ஒன்று என அறிந்தபோது, அம்மொழியை கற்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இந்நிலையில், நியூயார்க்கில் தமிழர்களால் நடத்தப்படும் உணவகங்களை தேடத் துவங்கினேன். அப்படி இந்த உணவகத்தில் நுழைந்து நான் அழகு தமிழில் பேசியதை கேட்டு உரிமையாளர் மகிழ்ச்சி அடைந்து இலவசமாக உணவு வழங்கினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement