தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி குவிக்க திட்டமிடும் இந்தியா.. திகைக்கும் உலக நாடுகள்..!

ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையின் ஆரம்பத்தில் இருந்தே நடு நிலை வகித்து வருகின்றது. அதேசமயம் ரஷ்யாவுடனான வணிக உறவினையும் மேம்படுத்தி வருகின்றது.

குறிப்பாக ரஷ்யாவுடனான் கச்சா எண்ணெய் இறக்குமதியினை அதிகப்படுத்தியுள்ளது எனலாம்.

ரஷ்யாவிடம் இருந்து பல உலக நாடுகளும் எண்ணெய் வாங்குவதை தடை செய்துள்ளன. சில நாடுகள் தடை செய்ய திட்டமிட்டு வருகின்றன.

அதானி, அப்பல்லோ இணைந்து வாங்கும் நிறுவனம் எது தெரியுமா? பில்லியன் முதலீடு என தகவல்!

ரஷ்யாவுக்கு அழுத்தம்

ரஷ்யாவுக்கு அழுத்தம்

ரஷ்யாவின் முக்கிய வணிகமாக எரிபொருள் வணிகத்திலேயே கைவைத்தால், பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்திக்கலாம். இதனால் ரஷ்யா தனது தாக்குதலை நிறுத்திக் கொள்ளும் என மேற்கத்திய நாடுகள் உறுதியாக நம்பின. ஆனால் பல நாடுகளின் அழுத்தம் இருந்தாலும், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றது.

இறக்குமதியை அதிகரிக்க திட்டம்

இறக்குமதியை அதிகரிக்க திட்டம்

ரஷ்யாவும் இந்தியாவுக்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்வதாகவும் அறிவித்தது. இந்த நிலையில் ரோஸ் நெஃப்ட்ல் இருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்க, இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு தங்களது இறக்குமதியினை இரட்டிப்பாக்க திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒப்பந்தங்கள் இறுதி நிலையா?
 

ஒப்பந்தங்கள் இறுதி நிலையா?

மேலும் இதற்காக ஆறு மாத ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், டெலிவரி அடிப்படையில் சரக்குகள் தேடப்படுவதாகவும் தெரிகிறது. மேலும் விற்பனை அதிகரிக்க விற்பனையாளர்கள் ஷிப்பிங் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற விஷயங்களையும் கையாளத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக கச்சா எண்ணெய் விலையானது தள்ளுபடி விலையுடன், ஷிப்பிங் கட்டணம், இன்சூரன்ஸ் என அனைத்தையும் விற்பனையாளர் கையாளத் தயாராக இருப்பதாக தெரிகிறது.

பேச்சு வார்த்தை

பேச்சு வார்த்தை

இது குறித்து தகவல்கள் வெளியாகினாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை ஏதும் வெளியாகவில்லை. மேலும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கும் எண்ணெய்க்கு தனித் தனியாக ஒப்பந்தங்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனினும் விலை நிர்ணயம் மற்றும் பேமெண்ட் பரிவர்த்தனை குறித்தான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறக்குமதி திட்டம்

இறக்குமதி திட்டம்

இந்த தள்ளுபடி விலையில் இந்தியன் ஆயில் கார்ப், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் நேரடியாக ரஷ்யா நிறுவனத்திடம் இருந்து நேரடியாக எண்ணெய் கொள்முதல் செய்யலாம் என தெரிகிறது. எனினும் இது குறித்து தனியார் நிறுவனங்களும் ஆலோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதமே இந்தியாவும், சீனாவும் வரலாறு காணாத அளவு இறக்குமதியினை செய்துள்ளன.

தள்ளுபடியுடன் இறக்குமதி

தள்ளுபடியுடன் இறக்குமதி

பல தடைகளை தாண்டி முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி குவித்து வந்தது இந்தியா. இது சொந்த தேவைக்கு மட்டும் இன்றி, இந்தியாவில் இருந்து அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 8,40,645 பேரல்கள் எண்ணெய் இறக்குமதியினை இந்தியா செய்துள்ளது.

முந்தைய நிலவரம்

முந்தைய நிலவரம்

இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 3,88,666 பேரல்களாகவும், கடந்த ஆண்டு மே மாதத்தில் 1,36,774 பேரல்களாகவும் இருந்தது. இது இனி வரவிருக்கும் மாதங்களில் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு ஏறக்குறைய 20% அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 2% ஆக மட்டுமே இருந்தது. ஆக இது ஏற்கனவே மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

லாபம் ஈட்டும் இந்திய நிறுவனங்கள்

லாபம் ஈட்டும் இந்திய நிறுவனங்கள்

இந்தியாவின் இந்த இறக்குமதி அதிகரிப்பு மூலம் இந்திய நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டி வருகின்றன. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு எரிபொருளாக மாற்றப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனினும் இதற்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தால், இது இந்தியாவுக்கு பிரச்சனையாக மாறக்கூடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

india may increase russian oil imports from rosneft

Indian oil companies are reportedly in talks with Rosneft to buy crude oil at a discount and plan to increase imports.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.