திருமணத்தின் போது மாலைகளுக்கு பதிலாக பாம்புகளை மணமக்கள் கழுத்தில் ஒருவருக்கொருவர் அணிவித்து கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
திருமணங்களில் பல வித சடங்குகள் நடக்கின்றன. இந்த சடங்குகளின் போது பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண முடிகின்றது. இவற்றில் சில சம்பவங்கள் மணமக்கள் மற்றும் விருந்தினர்களின் மனதில் அப்படியே நின்றுவிடுவதுண்டு.
அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற திருமண சடங்கின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் சித்தார்த் சோனவன் (25). இவருக்கும் ஸ்ருஸ்டி (23) என்ற பெண்ணிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
இருவருமே உள்ளூர் வனவிலங்கு துறை ஊழியர்கள் என கூறப்படுகிறது.
பொதுவாக திருமணத்தில் மணப்பெண்ணும், மணமகனும் மாலையை மாற்றி கொள்வார்கள்.
ஆனால் இந்த திருமணத்தில் சித்தார்த்த பெரிய மலைப்பாம்பை மாலையாக மணப்பெண் கழுத்தில் போட பதிலுக்கு ஸ்ருஸ்டி நீளமான பாம்பை சித்தார்த்த கழுத்தில் போட்டார்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால், பாம்புகளைப் பிடிக்கும் போது மணமகனும், மணமகளும் பயந்ததாகவே தெரியவில்லை..!