புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது முகநூல் பக்கத்தில் நேற்று கூறியிருப்பதாவது:
நாட்டின் பொருளாதார நிலை சீர்கேடு அடைந்துள்ளது. இந்தியர்களின் தனிநபர் வருமானம் வீழ்ச்சியடைந்து வருகிறது. இதற்கு பாஜகவிடம் பதில் இல்லை. அரசாங்கம் கொள்கை ரீதியாக திவால் நிலையில் உள்ளது. தனிநபர் வருமானம் ரூ.94,270 ஆக இருந்த நிலையில் இப்போது ரூ.91,481 ஆக குறைந்துவிட்டது. அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் இந்திய பொருளாதார நிலையை மோசமாக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.