தென்காசி மாவட்டத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக திருமணமான 4 மாதத்திலேயே கர்ப்பிணி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி கருங்குளம் தெருவை சேர்ந்த முத்துராஜ்-கனகலட்சுமி தம்பதியரின் மகள் துர்காதேவிக்கும், விருதுநகர் மாவட்டம் கார்த்திகைப்பட்டியை சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணமானது.
இவர்களுக்கு இடையே தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக குடும்ப பிரச்சனை இருந்து வந்தநிலையில், துர்காதேவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து கருத்தபாண்டி துர்காதேவியை தன்னுடன் வாழ்வதற்காக அனுப்ப வேண்டும் என்று சிவகிரி ஊர் நாட்டாமைகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அவமானமாக நினைத்த துர்காதேவி, 3 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துள்ளார்.
இதனை சிவகாசியில் உள்ள சித்தியிடம் செல்போனில் விஷம் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து துர்க்காதேவி வீட்டின் அருகே உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், துர்கா தேவியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக சிவகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.