தெலுங்கானாவில் தொடரும் சிறுமியர் பலாத்கார சம்பவம்| Dinamalar

ஹைதராபாத் : ஹைதராபாதில், 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெலுங்கானாவில் மேலும் இரண்டு சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது. தலைநகர் ஹைதராபாதில், 17 வயது சிறுமி, பள்ளி மாணவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இது நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்நிலையில், கடந்த சில நாட்களில், மேலும், இரண்டு சிறுமியர் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர்.ஹைதராபாதின் சார்மினார் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் பணியாற்றும், 16 வயது சிறுமியை, முகமது சூபியான், 21, என்ற இளைஞர் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி அளித்த புகாரின்படி, அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ரங்கா ரெட்டி மாவட்டத்தில், தன் வீட்டுக்கு செல்வதற்காக காத்திருந்த, 11 வயது சிறுமியை, ‘கால் டாக்சி’ டிரைவர் ஒருவர் அணுகியுள்ளார். வீட்டில் விட்டு விடுவதாகக் கூறி, தன் காரில் அழைத்து சென்றுள்ளார். செல்லும் வழியில், தன் நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.இதையடுத்து, கலீம் அலி, முகமது அஹமது ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.