நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலைகளில் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கை
குறைந்தபட்ச விலையில் உணவுப் பொட்டலத்தை வழங்குமாறு 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த கோரிக்கை தொடர்பில் சபைக் குழுவில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.