லண்டன்,
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து 10 விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டி கிராண்ட்ஹொம் 42 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன், மேட் போட்ஸ் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 10 விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து வீரர் டிம் சவுதி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து, 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 10 விக்கெட்டுகளையும் இழந்து 285 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் பிராட், மேட் போட்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 279 ரன்களை எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் அதிகபட்சமாக 115 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.
போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.