கொழும்பு:
அதிபர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், எனக்கு ஐந்தாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தோல்வியுற்ற அதிபராக என்னால் செல்ல முடியாது. எஞ்சிய இரண்டு வருடங்களையும் முழுமையாக பூர்த்தி செய்வேன். அதேநேரம், நான் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ஆதரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்று கோத்தபய ராஜபக்ச தெரிவித்தார்.