சென்னை: அரசு கட்டிடங்களின் புதிய முகப்பு தோற்றங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழகத்தில் அரசுக் பள்ளிக் கட்டிடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அனைத்து அரசுக் கட்டிடங்களின் கட்டுமான பணிகளும் பொதுப்பணித் துறையார் மேற்கொள்ளப்படும். இந்த கட்டிடங்களை நவீன முறையும், புதுமையான முகப்பு தோற்றங்களை கொண்டு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி அக்கட்டிடங்களின் வரைபடம், பயன்பெறும் துறைகளை கலந்தாலோசித்து தற்போதைய தேவைக்கேற்றவாறு மாற்றி அமைத்து நவீன முகப்பு தோற்றத்துடன் பொதுவான கட்டமைப்பு பொதுப்பணித் துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பொதுப்பணித் துறையால் கட்டப்படவுள்ள அரசு பள்ளிக் கட்டிடம், மாணவ மாணவியர் தங்கும் விடுதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், நகர் ஊரமைப்பு இயக்குநர் அலுவலகம் ஆகிய கட்டிடங்களின் புதிய முகப்புத் தோற்ற வரைபடத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.