அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள வெஸ்ட்செஸ்டர் & ஜாக்சன் ஏவ் ரயில் நிலையத்தின் நடைமேடையில் நடந்து வந்த 52 வயதுள்ள பெண்ணை அவரது பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தண்டவாளத்தில் தள்ளி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் விரைந்து சென்று அப்பெண்ணைக் காப்பாற்றினர். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில் ஏதும் வராததால் அப்பெண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
மேலும் படிக்க | அமெரிக்காவில் வார இறுதியில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு – 3 பேர் பலி
WANTED-ASSAULT: 6/5/22 approx. 4:40 PM, Westchester & Jackson Ave train station @NYPD40PCT Bronx. The suspect pushed a 52-year-old female victim on the tracks. Any info call us at 800-577-TIPS or anonymously post a tip on our website https://t.co/TRPPY5zHV2 Reward up to $3,500 pic.twitter.com/M8kflD010M
— NYPD Crime Stoppers (@NYPDTips) June 7, 2022
எனினும், அவருக்கு தலை மற்றும் காலில் லேசான காயங்கள் ஏற்பட்டன. மர்ம நபர் அப்பெண்ணை தண்டவாளத்தில் தள்ளி விடும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அந்நபர் குறித்த தகவல்களைத் தருவோருக்கு 3,500 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படுமென போலீசார் அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | நைஜீரியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு; 50 பேர் பலி
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR