‘பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த கம்பெனிக்கு மீண்டும் வாய்ப்பு ஏன்?’ அண்ணாமலை வீடியோ

தமிழகத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படும் சத்துணவு பெட்டகத்தில் திமுக அரசு ஊழல் செய்திருபபதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விளக்கம் அளித்திருந்த நிலைலையில், தற்போது இந்த ஊழல் தொடர்பான ஆதாரங்களுடன் அண்ணாமலை வீடியோ பதிவு உன்றை வெளியிட்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவில்,

சகோதர சகோதரிகளே உங்களுக்கு என் அன்பார்ந்த வணக்கம். தி.மு.க அரசு கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுக்கக்கூடிய சத்துணவு பெட்டகத்தில் செய்திருந்த ஊழல்குறித்து நாங்கள் பேசியிருந்தோம். முறைகேடான கம்பெனிகளுக்கு எப்படி கங்கனம் கட்டிக்கொண்டு வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று பேசியிந்தோம். அதற்குப் பல அமைச்சர்கள் விளக்கம் அளித்திருந்தார்கள். அவை அனைத்துமே நகைப்புக்குரிய வகையில்தான் இருந்தது.

இவர்கள் இன்னும் தமிழ்நாட்டு மக்களை முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-வின் ஊழல் தொடர்பான ஆதாரம் இதோ…. எங்களின் முதல் குற்றச்சாட்டு… பொங்கல் தொகுப்பில் ஊழல் செய்த நிறுவனத்திற்கு மறுபடியும் நீங்கள் இந்த டெண்டரில் வாய்ப்பு கொத்துள்ளீர்ள். கருப்பு பட்டியலில் வைத்துள்ளோம் எனக் கூறிய முதல்வர் ஸ்டாலின், எதற்றாக இந்த அனிதா டெக்ஸ்காட்டை மீண்டும் இந்த டெண்டரில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தது ஏன்?

ஆவின் நிறுவனம் கர்ப்பிணிப் பெண்களுக்குக் கொடுக்கக்கூடிய சத்துணவு பெட்டகம் தயாரிக்க தரநிர்ணய சான்றுடன் தயாராக இருந்து, அதற்குப் பின்பு கடந்த மார்ச் மாதம் 7,15, 31 ஆகிய தேதிகளில் 3 அமர்வுகளாக ஆலோசித்து முடிவு செய்ததற்குப் பின்பு, ஒரு சிலரின் தலையீட்டின் காரணமாக ஏப்ரல் 8-ம் தேதி ஒப்பந்தத்தை மாற்றிக் கொடுக்கப்பட்டிருப்பதற்கான காரணம் என்ன?

இதற்கு அமைச்சர் கொடுத்த விளக்கம் ஆவின் எப்படி இதை பண்ணும் இது குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவு என்று சொல்கிறார்கள். இப்படி சொல்லி கேவலப்படுத்தும்போது அது விவசாயிகளை கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். எதுவாக இருந்தாலும் விவசாயிகளிடம் இருந்துதான் பெற்றுக்கொண்டு வருகிறோம். அவர்கள் கடுமையான உழைப்பை கொடுகிறார்கள்.

ஆவின் நிறுவனம் தாங்கள் தயாராக இருப்பதாக அனைத்து சான்றுகளையும் கொடுத்தும் இங்கிருக்கும் அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொண்ட பிறகும் இந்த முடிவில் இருந்து பின்வாங்குகிறார்கள் என்றால் என்ன காரணம் அமைச்சர் எதற்காக பொய் சொல்ல வேண்டும். யாரோ ஒருவரை காப்பற்ற வேண்டும் என்பதற்றாக எதற்கு ஆவின் நிறுவனத்தை கேவலப்படுத்த வேண்டும்? மறுபடியும் நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் வணக்கம் என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.