மதுரையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகத்தின் கட்டிடப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
புதுநத்தம் சாலையில் 2 புள்ளி 61 ஏக்கர் பரப்பில் அந்த நூலகம் கட்டப்படும் நிலையில், 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாநாட்டுக் கூடம், சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகப்பிரிவு, வைபை இணையதள வசதி உள்ளிட்டவை அந்த நூலகத்தில் ஏற்படுத்தப்பட உள்ளன.