சீனாவின் ஷாங்காய் நகரத்தில் கொரோனா பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரித்துள்ளது.
ஷாங்காயில் இரண்டு மாதத்திற்கு பிறகு வாகனங்கள் இயக்கப்படுவதுடன், துறைமுகங்களும் செயல்பட தொடங்கியுள்ளதால் எரிபொருள் தேவை அதிகரித்து கச்சா எண்ணெய் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
சவுதி அரேபியாவும், ஆசியாவுக்கான கச்சா எண்ணெய் விலையை 2.10 டாலர் உயர்த்தியுள்ளது.