வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மருத்துவ பரிசோதனை நிறுவனமான ‘மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர்’ நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை வாங்கும் முயற்சியில், ‘அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் என்டர்பிரைஸ்’ நிறுவனம் மற்றும் அதானி குழுமம் ஆகியவை இறங்கி உள்ளன.
ஒரு பில்லியன் டாலர் அதாவது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 7,765 கோடி ரூபாய் மதிப்பில் மெட்ரொபொலிஸ் நிறுவன பங்குகள் கையகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. அதானி குழுமத்தை பொறுத்தவரை, மருத்துவமனை, மருந்தகங்கள் மற்றும் பரிசோதனை நிலையங்களை கையகப்படுத்தும் வகையில், ‘அதானி ஹெல்த் வெஞ்சர்ஸ்’ எனும் துணை நிறுவனத்தை அண்மையில் துவக்கி உள்ளது.
மெட்ரோபொலிஸ் நிறுவனத்தை கையகப்படுத்துவதன் வாயிலாக, ஆரோக்கிய பராமரிப்பு துறையிலும் அடியெடுத்து வைக்க அதானி நிறுவனம் முயற்சிக்கிறது. மெட்ரோபொலிஸ் நிறுவனம், 1980ம் ஆண்டில், ஒரே ஒரு பரிசோதனை கூடத்துடன் துவக்கப்பட்ட நிறுவனமாகும். தற்போது இந்நிறுவனம், கிட்டத்தட்ட 19 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது.
Advertisement