யூடியூபர் சாட்டை துரைமுருகன் யூடியூபில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனம் செய்தும், அவதூறான கருத்துக்களை பேசிய வீடியோ வெளியிட்டார்.
இதையடுத்து துரைமுருகன் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். ஜாமின் மனுவை விசாரித்த நீதிமன்றம் இனிமேல் இதுபோன்ற அவதூறுகளை பரப்ப மாட்டேன் என உறுதிமொழி பத்திரம் பெற்றுக்கொண்டு நிபந்தனை ஜாமினில் துரைமுருகனை விடுதலை செய்தது.
இதனிடையே சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் அளித்த உறுதிமொழி உத்தரவாதத்தையும் மீறி தமிழக முதல்வர் குறித்த அவதூறு பேசி வருகிறார். இதன் பேரில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே இவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அரசு சார்பில் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முதலமைச்சர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.