ரூ.1 லட்சம் கோடி இழப்பு.. எல்ஐசி முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

இந்தியாவின் மிகப்பெரிய லைப் இன்சூரன்ஸ சேவை நிறுவனமான எல்ஐசி ஐபிஓ வெளியிட்ட நாளில் இருந்து முதலீட்டாளர்களுக்கு அதிகளவிலான இழப்பை அளித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு வர்த்தக நாளாகச் சற்றும் எதிர்பாராத வகையில் எல்ஐசி பங்குகள் வரலாற்றுச் சரிவைப் பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

இது டாடாவின் டிவிடெண்ட் திருவிழா.. 605% வரை வருமானம்.. யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

எல்ஐசி முதலீட்டாளர்கள்

எல்ஐசி முதலீட்டாளர்கள்

எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ தோல்வியில் நம்பிக்கை இழந்த முதலீட்டாளர்கள் தற்போது தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்யத் துவங்கியதால் திங்கட்கிழமை சரிவைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையும் எல்ஐசி பங்குகள் சரிந்துள்ளது.

755.60 ரூபாய்

755.60 ரூபாய்

மும்பை பங்குச்சந்தையில் இன்று சற்றும் எதிர்பார்க்காத வகையில் 2.75 சதவீதம் வரையில் சரிந்து 755.60 ரூபாய் வரையில் சரிந்து புதிய வரலாற்றுச் சரிவை பதிவு செய்துள்ளது. எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ விலையான 949 ரூபாயில் இருந்து 20 சதவீதம் குறைவாகும்.

டாப் 10 நிறுவனங்கள்
 

டாப் 10 நிறுவனங்கள்

இன்றைய சரிவின் மூலம் எல்ஐசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு 4.8 லட்சம் கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது, ஆயினும் டாப் 10 நிறுவனங்கள் பட்டியலில் எல்ஐசி தொடர்ந்து தனது 7வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. ஐபிஓ வெளியிட்ட பின்பு வெறும் 4 நாட்கள் மட்டுமே எல்ஐசி உயர்வுடன் இருந்தது.

1 லட்சம் கோடி இழப்பு

1 லட்சம் கோடி இழப்பு

எல்ஐசி நிறுவனம் ஐபிஓ வெளியிடும் போது 6,00,242 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெளியானது, தொடர் பங்கு விற்பனை காரணமாக எல்ஐசி நிறுவனம் 1 லட்சம் கோடிக்கு மேல் மதிப்பீட்டை இழந்து தற்போது வெறும் 4.8 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

இந்திய முதலீட்டாளர்கள் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவுகளுக்கும், சர்வதேச முதலீட்டாளர்கள் அமெரிக்கப் பணவீக்கம் தரவுகள் மற்றும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாடுகளில் வட்டி விகித உயர்வு முடிவுகள் ஆகியவற்றுக்காகக் காத்திருக்கும் நிலையில் இன்றைய வர்த்தகம் பெரும் சரிவுடன் துவங்கியுள்ளது.

முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

இதன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் தள்ளாடும் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்துவிட்டு நிலையான மற்றும் அதிகம் லாபம் தரும் நிறுவனங்களில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். மேலும் பெரும் முதலீட்டாளர்கள் நீண்ட கால அடிப்படையில் முன்னணி நிறுவனங்களில் மட்டும் அதிகப்படியான முதலீடு செய்யும் காரணத்தால் எல்ஐசி பங்குகள் அதிகளவிலான விற்பனையை எதிர்கொண்டு வருகிறது.

ரீடைல் முதலீட்டாளர்கள்

ரீடைல் முதலீட்டாளர்கள்

எல்ஐசி பங்குகள் மே 18ஆம் தேதி முதல் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் 13.56 சதவீதம் சரிந்துள்ளது. எல்ஐசி நிறுவனத்தின் 52 வார உயர்வு விலை 920.00 ரூபாய் ஆனால் இன்று 755 ரூபாய். எல்ஐசி ஐபிஓ-வில் அதிக எண்ணிக்கையில் முதலீடு செய்தது ரீடைல் முதலீட்டாளர்கள் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LIC shares hits new all-time low Rs.755; LIC investors lose over 1 lakh cr since ipo

LIC shares hits new all-time low Rs.755; LIC investors lose over 1 lakh cr since ipo 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு.. எல்ஐசி முதலீட்டாளர்கள் கண்ணீர்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.