டாக்கா : வங்கதேசத்தில், ரசாயன கிடங்கு தீ விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண, அவர்களின் உறவினர்களிடம் இருந்து மரபணு மாதிரி சேகரிக்கும் பணி துவங்கிஉள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சிட்டகாங் துறைமுகம் அருகே உள்ள ரசாயன கிடங்கில், மூன்று தினங்களுக்கு முன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில், 49 பேர் உயிரிழந்தனர்; 450க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில், 13 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.இதற்கிடையே, இறந்தவர்களை அடையாளம் காண, அவர்களின் உறவினர்களிடம் இருந்து மரபணு மாதிரிகளை சேகரிக்கும் பணி துவங்கி உள்ளது. விபத்து நடந்த ரசாயன கிடங்கில், 26 சரக்கு பெட்டகங்களில், ‘ஹைட்ரஜன் பெராக்ஸைடு’ எனும் ரசாயனம் இருந்துள்ளது. இதில் ஏற்பட்ட கசிவு தான், தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement