`வாரணாசி' உணவகத்தில் வெற்றியைக் கொண்டாடிய ஜானி டெப்; செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா?

ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட் வழக்கில் ஜானிக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்கக் கோரி வெர்ஜினியா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. `பைரட்ஸ் ஆஃப் கரீபியன்’ படங்களின் நாயகன் ஜானி டெப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததையடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

ஜானியும் அவரது நண்பர்களுடன் இந்த வெற்றியை 62,000 அமெரிக்க டாலர் செலவழித்து (இந்திய மதிப்பில் ரூபாய் 48 லட்சம்) கொண்டாடியுள்ளார். லண்டன் பர்மிங்காமில் உள்ள இந்திய பாரம்பரிய ரெஸ்டாரண்ட் ஒன்றில் இந்தக் கொண்டாட்ட நிகழ்வு நடந்திருக்கிறது.

வாரணாசி உணவகம், பிர்மிங்ஹம்

ஜானி டெப்பின் நண்பர்கள் ஜெஃப் பெக் உள்ளிட்ட 20 பேர் கலந்து கொண்ட இந்த விருந்தில் பரிமாறப்பட்ட உணவுகளின் பட்டியல் ஷிஷ் கெபாப்பில் ஆரம்பித்து சிக்கன் டிக்கா, பன்னீர் டிக்கா மசாலா, லேம்ப் கராஹி, தந்தூரி இறால் என நீண்டு கொண்டே செல்கிறது.

400 பேர் அமரக்கூடிய வசதியுள்ள பெரிய உணவகங்களில் ஒன்று இந்த ‘வாரணாசி’ உணவகம். ஜானியின் பாதுகாப்புக் குழுவினர் இந்த உணவகத்தின் பணியாளர்களிடம் ஆரம்பத்தில் பேசியுள்ளனர்.

“ஜானி டெப் தன் நண்பர்களோடு சாப்பிட வர விரும்புவதாக எங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு அழைப்பு வந்தது. முதலில் இது ஏதோவொரு ஜோக் எனவே நினைத்தோம். அதன் பிறகு பாதுகாப்புக் குழு வந்து சோதித்தனர். வேறு வாடிக்கையாளர்கள் வந்தால் தொந்தரவு ஏற்படலாம் என்பதால் முழு உணவகத்தையே அவர்களுக்குக் கொடுத்தோம்” என்கிறார் வாரணாசி உணவகத்தின் இயக்குநர் முகம்மது ஹுசைன்.

வாரணாசி ஹோட்டல் பணியாளருடன் ஜானி டெப்

“ஊழியர்களிடம் பேசியபடியும் செல்ஃபி எடுத்துக் கொண்டும் ஜானி நீண்ட நேரம் இங்கே செலவிட்டார். அவர் மிகப்பெரிய நடிகர். ஆனால் எளிமையாக எங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பழகினார்” என ஜானிக்கு பாராட்டுப் பாத்திரம் வாசிக்கிறார்கள் பணியாளர்கள்.

ஜானி டெப் தனது முன்னாள் மனைவி ஆம்பர் மீது தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வந்த போதும் அவர் லண்டனில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.