Serial Actress Kaavya Arivumani Excises With Vikram Theme Music : சின்னத்திரையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் விஜய் டிவியின் அடையாளமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், ஹேமா ராஜ்குமார், உள்ளிட்ட பலரும் நடித்து வரும் இந்த சீரியல், கூட்டுக்குடும்பம், சகோதர பாசம் உள்ளிட்ட தேவைகளை அடிப்படையாக கொண்டது.
இந்த சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்து வந்த விஜே சித்ரா திடீரென மரணமடைந்த நிலையில், அவருக்கு பதிலாக முல்லை கேரக்டரில் எண்ட்ரி கொடுத்தவர் தான் காவியா அறிவுமணி. பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான இவர், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சிறப்பாக நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் முல்லை கேரக்டருக்கு குழந்தை பிறக்க ட்ரீட்மெண்ட் செய்ததற்கு செலவான படம் தொடர்பான மீனாவின் அப்பா ஜனார்த்தன் செய்த பிரச்சினையின் காரணமாக தற்போது முல்லையும் கதிரும் வீட்டை விட்டு வெளியேறுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அடுத்து என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் இருக்கும் நிலையில், மறுப்பக்கம், சீரியல் நடிகர் நடிகைகள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரைலாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
அந்தவகையில் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும், காவியா அறிவுமணி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். விக்ரம் படத்தின் தீம் மியூசிக்குடன் தொடங்கும் இந்த வீடியோவில் காவியா கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், காவியா வேற மாதிரி என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.