களத்தில் அமைதியாக இருப்பது எப்படி என தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டதாக தென் ஆப்பிரிக்க வீரர் பிரிட்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, டெல்லியில் ஜூன் 9ஆம் திகதி நடக்க உள்ளது. இதற்காக தென் ஆப்பிரிக்க அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய தென் ஆப்பிரிக்க வீரர் பிரிட்டோரியஸ், முதல் டி20 போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தோனி குறித்து பிரிட்டோரியஸ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது,
‘தோனி எப்போதுமே அவரை நம்புவார். அனைத்துமே எந்த சூழ்நிலையிலும் சத்தியம் என்றுதான் அவர் இருப்பார். மூன்று பந்துகளில் 18 ஓட்டங்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தால், பந்துவீச்சாளராக கூட நீங்கள் தோற்கலாம். ஆனால் துடுப்பாட்ட வீரர்களுக்கு அப்போதும் வாய்ப்பு இருக்கும் என நம்புபவர் தான் தோனி.
அதற்காக பதற்றம் அடையவும் மாட்டார், அனைத்தையும் அவர் தலையில் சுமத்திக் கொள்ளவும் மாட்டார். அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது என்னவென்றால், களத்தில் எப்படி அமைதியாக செயல்படுகிறார் என்பதைத் தான்.
பேட்டிங்கில் இருக்கும்போது அவர் மீது இருக்கும் அழுத்தத்தை பந்துவீச்சாளர்களுக்கு கடத்திவிடுவார் தோனி.
Photo Credit: Twitter
இப்படி தான் இறுதிக் கட்டத்தில் துடுப்பாட்ட வீரர்களை விட பந்துவீச்சாளர்களுக்கு தான் நெருக்கடியும், அழுத்தமும் அதிகம் என்று அவர் எனக்கு புரிய வைத்துள்ளார்.
இதை தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பின்பற்ற போகிறேன். களத்தில் அமைதியாக நின்று தன்னம்பிக்கையுடன் இருந்தால், போட்டியை எந்த சூழலிலும் வெல்லலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய அனுபவம் நிச்சயம் எனக்கு இந்தியாவுக்கு எதிரான தொடரில் கைகொடுக்கும். சென்னை அணியை பொறுத்தவரை, அது அனுபவமிக்க அணி’ என தெரிவித்துள்ளார்.
பிரிட்டோரியஸ் 22 டி20 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் ஒரே போட்டியில் 77 ஓட்டங்கள் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.