Moto G82 5G: அதிக சிறப்பம்சங்கள் கொண்ட பட்ஜெட் பிரண்ட்லி மோட்டோ 5ஜி போன் இன்று முதல்!

Moto G82 5G: ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான மோட்டோரோலா தனது புதிய ஸ்மார்ட்போனான மோட்டோ ஜி82 5ஜி போனை ஜூன் 7ஆம் தேதியான இன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஸ்னாப்டிராகன் புராசஸர், OLED டிஸ்ப்ளே, பாஸ்ட் சார்ஜிங் என பல அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் விற்பனை தேதி இன்று பகல் 12 மணிக்கு பின் தெரியவரும்.

Nothing Phone 1: நத்திங் ஸ்மார்ட்போன்; டெக்கிகளின் புதிய நம்பிக்கை!

மோட்டோரோலா ஜி82 5ஜி விலை (Motorola G82 5G Price in India)

மோட்டோ ஜி82 போன் இந்தியாவில் ரூ.25,999 என்ற விலைக்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனில் குறைந்தபட்சம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Oppo K10 5G: ஜூன் 8 வெளியாகும் ஒப்போ K10 5ஜி போன் – கிடைத்த தகவல்கள் இங்கே!

மோட்டோரோலா ஜி82 5ஜி அம்சங்கள் (Motorola G82 5G Specifications)

புதிய மோட்டோ ஜி82 5ஜி போன் 6.6-இன்ச் 10-பிட் pOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும். இது பில்லியன் நிறங்கள் ஆதரிக்கும். இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தையும் உள்ளடக்கி இருக்கும்.

இந்த போனில் பஞ்ச் ஹோல் துளை கொண்ட டிஸ்ப்ளே இருக்கும். இதில் உங்களுக்கு செல்ஃபி கேமரா கிடைக்கும். போனின் பின் பேனலில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது.

BSNL Recharge: பிஎஸ்என்எல் ரூ.22 ரீசார்ஜில் 90 நாள்கள் வேலிடிட்டி… நம்பினால் நம்புங்கள்!

மோட்டோரோலாவின் வெளியிட்டுள்ள டீஸ்களின் படி, இந்த போன் பிரிவு OIS ஆதரவுடன் 50 மெகாபிக்சல்கள் கொண்ட முதன்மை சென்சாரைக் கொண்டிருக்கும். இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் நிறுவப்பட்டுள்ளது.

இந்த போன் 30 வாட் டர்போ ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன், 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. ப்ளூ லைட் சான்றிதழ், கலர் கேமட் போன்ற சிறந்த அம்சங்கள் புதிய மோட்டோ போனில் இடம்பெற்றிருக்கும்.

21000mAh Battery Phone: நம்புற மாதிரி இல்லையே… 94 நாள்கள் தாங்கும் பேட்டரியா!

குறைந்த அளவு பெசல்கள் கொண்ட இந்த போனில் டால்பி அட்மாஸ் தரத்திலான ஸ்டீரியோ ஸ்பீக்கர் அமைப்பு வழங்கப்படும். மேலும், தரவு பாதுகாப்புக்காக திங் ஷீல்ட் நிறுவப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.