Realme 9i 5G: ரியல்மி 9ஐ 5ஜி இந்திய வெளியீடு எப்போது?

இந்திய சந்தையில் சரியான, பலமான அடித்தளத்தை அமைக்க சீனாவில் ரியல்மி முனைப்புக் காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான், நிறுவனம் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த மாதத்தில் புதிய ரியல்மி 9i 5ஜி போனை அறிமுகம் செய்யவுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து, கேட்ஜெட்டுகள், வீட்டு உபயோக மின்னணு பொருள்கள் என நிறுவனம் இந்திய சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த மாதத்தில் ரியல்மி ஜிடி நியோ 3டி, ரியல்மி பேட் எக்ஸ் டேப்லெட் ஆகியவை கால்பதிக்க உள்ளது.

Moto G82 5G Launch: என்னமா பண்றீங்க மோட்டோ – அதிரடி அம்சங்கள்; அசரடிக்கும் விலையில் 5ஜி போன்!

இந்த நிலையில் புதிய 5ஜி போனையும் நிறுவனம் கொண்டு வருகிறதாம். முன்னதாக, இதன் இந்திய பிரிவு தலைமை நிர்வாக அலுவலர் மாதவ், உள்நாட்டில் ரியல்மி 9i 5G போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், சந்தையின் போக்கை கருதி நிறுவனம் தனது முடிவை மாற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரியல்மி 9, ரியல்மி 9 ப்ரோ தொடரில் இந்த ஸ்மார்ட்போன் கொண்டு வரப்படுகிறது.

ரியல்மி 9ஐ 5ஜி வெளியீட்டு தேதி, எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் ஜூன் மாதத்திற்குள் வெளியாகும் என்று தெரியவந்துள்ளது. ப்ளூ, பிளாக், கோல்டன் ஆகிய மூன்று நிறத் தேர்வுகளில் புதிய ரியல்மி 5ஜி மொபைல் வெளியாகலாம்.

iOS 16: காசில்லாம ஆப்பிள் ஐபோன் வாங்கிக்கலாம்!

மேலும், 4ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டேரேஜ் மெமரி, 4ஜிபி + 128ஜிபி ரேம், 6ஜிபி + 128ஜிபி ரேம் போன்ற மூன்று வேரியண்டுகளில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகலாம்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

இந்த போனில் 90Hz ரெப்ரெஷ் ரேட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 11 பேண்ட்கள் அடங்கிய 5ஜி ஆதரவு இதில் இருக்கும். அதுமட்டுமில்லாமல், 5,000mAh பேட்டரி உடன் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இதில் கொடுக்கப்படும் என்று வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.