விஷால் கார்க் இந்த பெயரினை பலரும் கேள்விபட்டிருக்கலாம்… அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ஏனெனில் பணி நீக்கம் செய்ததில் பேர் போன விஷால் கார்க், அவ்வப்போது ஏதேனும் சர்ச்சைகளில் சிக்குவதும், அதன் பிறகு மன்னிப்பு கேட்பதும் தெரிந்த விஷயமே.
முன்னதாக பெட்டர்.காம் நிறுவனத்தில் நடந்த பணி நீக்க நடவடிக்கையின் ஒரு பகுதியில், நீங்கள் இந்த ஜும் காலில் இருந்தால் மிக துரதிஷ்டவசமானவர். ஏனெனில் நிறுவனத்தில் நடைபெறும் பணி நீக்க நடவடிக்கையில் நீங்களும் ஒருவர் என கூறி, ஒரே ஜும் காலில் 900 பேரை பணி நீக்கம் செய்தவர்.
என்ன சொன்னார் சக்தி காந்த தாஸ்.. 10 முக்கிய விஷயங்கள்.. யாருக்கு என்ன பலன்..!
சர்ச்சைக்கு மேல் சர்ச்சை
இது குறித்து அந்த சமயத்தில் வெளியான வீடியோ பதிவு ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு தரப்பினரும் விஷால் கார்க்கினை திட்டி தீர்த்தனர். இப்படி அநாகரிகமான பணி நீக்கத்திற்காக பெயர் பெற்றவர் தான் விஷால் கார்க். இதற்கு முன்பாக ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு மெயில் ஒரு போர்ப்ஸ் பத்திரிக்கைக்கு கிடைத்து, அதுவும் பெரும் சர்ச்சையானது நினைவு கூறத்தக்கது.
யார் இந்த விஷால் கார்க்
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெட்டர்.காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான விஷால் கார்க், சந்தையின் செயல் திறன், ஊழியர்களின் செயல் திறன், உற்பத்தி திறன் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு, ஒரே ஜும் காலில் 900 பேரை பணி நீக்கம் செய்தார். இந்த அறிவிப்பினை கொடுத்த விஷால், இது என் கேரியரில் செய்யும் இரண்டாவது பணி நீக்கமாகும். இதனை நான் செய்ய விரும்பவில்லை என கூறியது குறிப்பிடத்தக்கது.
அடுத்த சர்ச்சை என்ன?
விஷால் கார்க் மற்றும் பெட்டர்.காம் நிறுவனத்தின் மீது முன்னாள் ஊழியர் ஒருவர், அதன் முதலீட்டாளர்களை தவறாக வழி நடத்தும் அறிக்கைகளை கொடுத்துள்ளதாக, பெட்டர்.காமின் விற்பனை மற்றும் செயல்பாடுகளுக்கான முன்னாள் நிர்வாக துணைத் தலைவரான சாரா பியர்ஸ் வழக்கு பதிவு செய்துள்ளார்.
மோசடி
இது பெட்டர்.காம் இந்த தவறான அறிக்கைகள் மூலம் SPAC உடன் இணைப்புக்கு செல்வதை உறுதி செய்வதையும், அதன் மூலம் பொதுவில் செல்லவும் திட்டமிட்டது. இதற்காகத் தான் அதன் அறிக்கைகள் தவறாக பிரதிநிதித்துவபடுத்தப்பட்டதாகவும் சாரா தெரிவித்துள்ளார்.
இழப்பீடு வேண்டும்
மேலும் இந்த ஒப்பந்தம் குறித்து கவலையை எழுப்பிய சாரா, கடந்த பிப்ரவரி மாதம் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். சாரா இதற்காக நிறுவனத்திடம் இருந்து இழப்பீடும் கேட்டுள்ளார்.
ஏற்கனவே பற்பல சர்ச்சைகளில் சிக்கி தப்பித்த விஷால் கார்க் இதனை எப்படி சமாளிக்க போகிறாரோ? தெரியவில்லை. எனினும் இது குறித்து பெட்டர்.காம் நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பினையும் கொடுக்கவில்லை.
Better.com vishal Garg sued for misleading investors; Famous CEO who fired 900 employees in zoom
A former employee of Better.com has filed a lawsuit against Vishal garg and the company for allegedly giving misleading statements to its investors.