’அறநிலையத்துறை சாியாக தன் கடமையை செய்கிறது’ – வாசகர்களின் கமெண்ட்ஸ்!

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஜூன் 7-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘சிதம்பரம் கோயிலில் அறநிலையத் துறை ஆய்வுக்கு தீட்சிதர்கள் மறுப்பு… ஆய்வு நடக்கும் என தமிழக அரசு உறுதி… நூற்றாண்டு பிரச்னை தீர்வை எட்டுமா?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
image
Kaviyanandh
கண்டிப்பாக ஆய்வு நடைபெற வேண்டும் அறநிலையத்துறை சாியாக தன் கடமையை செய்கிறது. தீட்சிதா்கள் ஆய்வுக்கு ஒத்துழைக்க வேண்டியது அவசியம் கணக்கு விவரங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும் அதைப்போலவே சிதம்பரம் கோயில் அறநிலையத்துறை கட்டுபாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும்
MurugesanSunda

சிதம்பரம்நடராஜர் கோயில்அரசாய்விற்கு தீட்சிதர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.அரசு ஆய்வுசெய்ய தீவிரம் காட்டுகிறது.பொற்கோவில் பிரச்சினைபோல் இதுபெரிதாகிவிடும் போலிருக்கிறது.சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வேடிக்கை பார்க்காமல் இருதரப்பையுமழைத்து விசாரித்து தீர்வு காண்க.
https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/pfbid0aTd6nTkLVkmw6AfXhR6LdGSqbaW4QddMqMjVXzcpzRSwYpVkRJYKMVRB5DXWZEful?comment_id=1688106504876269
கோவிலை கைப்பற்ற திட்டமிடும் அறநிலைய துறை ஆய்வு நடத்தினால் முடிவு எவ்வாறு இருக்கும் என நாடே அறியும்.
image
Leelusubbu
முன்பு இப்படி நடந்ததா?கேள்விப்பட்ட நினைவில்லை .புதிதா இப்ப நடக்குதா?இருபுறமும் மறுப்பு,விடாப்பிடியாக இருப்பது ஒரே டவுட்டாகஇருக்குது?!எந்தத் தவறும் இல்லை, நடக்கலன்னா ஏன் ஆய்வுக்குழுவைத் தடுக்கனும்?கோவில் சொத்துக்கள் மீட்பு, ஆதீனத்தின் வித்தியாசமான பேச்சு,ஆய்வு என்ன நடக்குது?
Kamala
The law of land is that everyone who has income should file income tax and follow laws in india. When a temple receives so much if donations even from abroad they should be transparent and publish their accounts in public domain. If they r correct why should allow govt to inspectSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.