திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் ஆனிமாத பூஜைக்காக வரும்14ந்தேதி திறக்கப்பட உள்ளதாகவும், பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட உள்ளது என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.
நாளை (வியாழக்கிழமை) பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, பூஜைகள் இந்து கோவில்களில் நடைபெறுவது வழக்கம். அதற்காக சபரிமலை அய்யப்பன்கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளதாக தேசம் போர்டு தெரிவித்து உள்ளது. பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறும். இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மேலும், ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி திறக்கப்படுகிறது. வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது.
தரிசனத்திற்கு வரும் அய்யப்ப பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.