ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் கடலுக்கடியில் உள்ள கேபிள் சேதம் அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வகையில் இணையத் தொடர்பு செயலிழந்தது.
கடலுக்கடியில் உள்ள கேபிள்களின் நான்கு அமைப்புகள் இணையத்தின் முதுகெலும்பாக அமைகின்றன.ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் இணைய இணைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவான வேகத்தில் இயங்கின.
இதில் சோமாலியா, தான்சானியா, மடகாஸ்கர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பு சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.