இந்திய ரிசர்வ் வங்கி இன்று காலை ரெப்போ வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியது என்பதும் இதனால் 4.40 என இருந்த வட்டி விகிதம் 4.90 என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக காரணம் கூறப்பட்டாலும் இந்த வட்டி விகிதம் உயர்வு பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக வங்கியில் பல்வேறு கடன்களை வாங்கியவர்கள் இனி அதிக தவணை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதே போல் பங்கு சந்தையிலும் இந்த வட்டி விகித உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
RBI அறிவிப்புக்கு பின்.. உங்க EMI எவ்வளவு உயரும் தெரியுமா..? ஒரு லட்சத்திற்கு இவ்வளவா..?!
பிக்ஸட் டெபாசிட்
இந்த நிலையில் வட்டி விகித உயர்வு பிக்ஸட் டெபாசிட் செய்தவர்களுக்கு லாபம் கிடைக்கும் என்பதும் அவர்களுக்கு அதிக சதவீதம் வட்டி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் Bond மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த வட்டி விகித உயர்வு அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக பொருளாதார அறிஞர்கள் கூறி வருகின்றனர்.
Bond முதலீடு
அரசு வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்கள் Bond மூலம் நிதி திரட்டி வருகின்றன. அதற்கு வட்டியாக Yield என்று கூறப்படும் வட்டி விகிதம் 7 முதல் 10 சதவிகிதம் வரை முதலீட்டாளர்களுக்கு தந்து கொண்டிருக்கின்றன.
வட்டி விகிதம்
இந்த நிலையில் ரெப்போ வட்டி விகித உயர்வு காரணமாக தற்போது Bond-ல் முதலீடு செய்தவர்களுக்கு வட்டி விகிதம் குறைய அதிக வாய்ப்பு உள்ளது. வட்டி விகித உயர்வும் Bondக்கு Yield வட்டி விகிதமும் ஒன்றுக்கொன்று எதிர்மறையானது என்பதால் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
சக்தி காந்த தாஸ்
இருப்பினும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அவர்கள் கூறியபோது Bond முதலீடுகள் மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் தடையின்றி செல்வதை உறுதி செய்ய ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது என்று கூறி உள்ளதால் Bond-ல் முதலீடு செய்தவர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
நடவடிக்கை
ரிசர்வ் வங்கி பங்கு சந்தையில் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் தேவைப்படும்போது தேவையான நடவடிக்கை எடுத்து Bond மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்களுக்கு சாதகமான நடவடிக்கை எடுப்போம் என்றும் சக்தி காந்ததாஸ் தனது உரையில் கூறியுள்ளார்.
Bond சந்தை
மத்திய அரசு இந்த ஆண்டு உள்நாட்டு Bond சந்தையில் இருந்து மிகப்பெரிய அளவில் அதாவது ரூ.14.31 லட்சம் கோடி கடன் வாங்கவுள்ளது என்றும், இதில் ரூ.8.5 லட்சம் கோடி 2022-23ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் கடன் வாங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
RBI hikes repo rate by 50 bps; debt mutual funds may be hit
RBI hikes repo rate by 50 bps; debt mutual funds may be hit | ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகித உயர்வால் பாண்ட் & மியூச்சுவல் பண்ட் முதலீட்டாளர்களுக்கு பாதிப்பா?