ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை பார்த்த பிரபல ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர் ராபர்ட் கார்கில், படம் வெறித்தனமாக இருந்ததாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படங்கள் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், ஆர்.ஆர்.ஆர் படமும் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை பார்த்த பிரபல ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர் ராபர்ட் கார்கில், ஆர்ஆர்ஆர் படம் வெறித்தனமான இருந்ததாக பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இதுவரை நான் பார்த்த படங்களிலேயே மிகவும் வெறித்தனமான, நேர்மையான வித்தியாசமான ப்ளாக்பஸ்டர் திரைப்படம் ஆர்ஆர்ஆர். நண்பர்கள் அழைப்பின் பேரில்தான் இந்த படத்தை பார்க்க சென்றேன். இப்போது நானும் இந்த படத்திற்கு மிகப்பெரிய ரசிகனாகி விட்டேன்” எனக் கூறியுள்ளார்.
ஹாலிவுட்டில் வெளியாகி சக்கைப்போடு போட்ட சினிஸ்டர், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதியவர்தான் ரோபர்ட் கார்கில் ஆவார்.
இதையும் படிக்கலாம்: ‘ ‘டான்’ முதலில் எனக்கு தான் வந்தது; நான் நடிக்காததற்கு காரணம் இதுதான்’ – உதயநிதி ஸ்டாலின்