இந்தியாவின் ஜிடிபி எதிர்பார்த்ததைவிட மிகவும் குறைவாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஜிடிபி என்பது ஒரு நாட்டில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும். அந்த கணக்கெடுப்பின் மூலம் அந்த நாட்டின் பொருளாதாரம் குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகரித்துள்ளதா? அல்லது குறைந்துள்ளதா? என்பதை கண்டறிய முடியும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும்போது உற்பத்திக்கான செலவுகளையும் கணக்கிட்டு, அதே பொருளின் விற்பனையையும் கணக்கிடும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த கணக்கீடு தெரியவரும்.
இந்தியாவின் ஜிடிபி விகிதம் Q4ல் 4.1% ஆக வளர்ச்சி.. FY22ல் 8.7% ஆக வளர்ச்சி..!
ஜிடிபி
இந்த நிலையில் இந்தியாவை பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் உருவாகும் ஜிடிபி கணக்கீடு ஜிடிபி 7.5 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது.
உலக வங்கி
கடந்த ஏப்ரலில் 8.7% ஆக இந்தியாவின் ஜிடிபி இருந்த நிலையில் அது பின்னர் 8 சதவீதமாக சரிந்த நிலையில் தற்போது உலக வங்கி 7.5 சதவீதமாக குறையும் என கணித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஜிடிபி 7.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம்
இதற்கு முக்கிய காரணமாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்னவெனில் பணவீக்கம், வினியோக பாதிப்பு, உலக அளவில் ஏற்படும் அரசியல் குழப்பங்கள் ஆகியவையே என்று கணித்துள்ளது.
குறையும் ஜிடிபி
இந்தியாவை பொருத்தவரை அடுத்த நிதி ஆண்டில் அதாவது 2023 – 24 ஆம் நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என்றும் அதற்கு அடுத்த நிதி ஆண்டில் அதாவது 2024 – 25-இல் 6.5 சதவீதமாக குறைய வாய்ப்பிருப்பதாகவும் உலக வங்கி கணித்துள்ளது. இந்தியாவின் ஜிடிபி மேலும் குறையும் என்ற தகவல் பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் ஜிடிபி
ஆனால் அதே நேரத்தில் ஜிடிபியில் சரிவு என்பது இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகில் உள்ள அனைத்து வளர்ந்த நாடுகளுக்குமே பாதகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான், சீனா, ரஷ்யா, ஐரோப்பா போன்ற நாடுகளில் ஜிடிபி வளர்ச்சியில் தற்போது இருப்பதை விட இன்னும் அதிகமாக சரியும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
பொருளாதார மந்தநிலை
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட சேதம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆகியவைதான் உலக பொருளாதார மந்த நிலைக்கு மிகப் பெரிய காரணமாக உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த அறிக்கையில் உலக வங்கி தெரிவித்துள்ளது.
World Bank cuts India GDP forecast to 7.5%: Check details
World Bank cuts India GDP forecast to 7.5%: Check details | இந்தியாவின் ஜிடிபி எதிர்பார்ப்பை விட இன்னும் குறையும்: உலக வங்கியின் அதிர்ச்சி தகவல்