இலங்கை கடவுச்சீட்டில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு – வீசா இன்றி பல நாடுகள் செல்ல சந்தர்ப்பம்


வீசா இன்றி குறைந்த பட்சம் 190 நாடுகளுக்கு மக்கள் பயணிக்கும் வகையில் இலங்கை கடவுச்சீட்டின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று Ratata Hetak ஹெடக் சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சியின் போது சபாநாயகரிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான கடிதம் ஒன்று சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக Ratata Hetak நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் சரத் களுகமகே தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கை கடவுச்சீட்டில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு - வீசா இன்றி பல நாடுகள் செல்ல சந்தர்ப்பம்

கடவுச்சீட்டு மீதான சர்வதேச தரவரிசைகளின்படி, இலங்கையின் கடவுச்சீட்டு மிகவும் குறைந்த தர நிலையில் உள்ளது.

ஆசிய நாடாக, ஜப்பானியர்கள் விசா இல்லாமல் 190 நாடுகளுக்கு பயணம் செய்யலாம். ஆனால், விசா இல்லாமல் நாங்கள் செல்ல முடியுமா? என அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு நாட்டின் அரசியல் அதிகாரிகளே முழுப்பொறுப்பாளிகள் என்பதை தாம் கடுமையாக வலியுறுத்துவதாக களுகமகே குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரம் அடைந்த பின்னர் ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கமும் இதில் கவனம் செலுத்தவில்லை.

இதற்குக் காரணம் அவர்களிடம் அதிகாரம் இருப்பதுதானாகும். அவர்கள் தங்கள் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தங்கள் இராஜதந்திர கடவுச்சீட்டுகளை பயன்படுத்துகிறார்கள்.

அரசியல்வாதிகளி்ன் பொறுப்பற்ற செயல்

இலங்கை கடவுச்சீட்டில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு - வீசா இன்றி பல நாடுகள் செல்ல சந்தர்ப்பம்

இவ்வாறான பின்னணியில், திறமைகள் அதிகம் உள்ள இலங்கையர்கள் ஏமாற்றமடைவது தவிர்க்க முடியாததாகி விட்டது. அவர்களால் நாட்டை விட்டு வெளியேற அல்லது தங்க முடியாத ஒரு நிலைமையே காணப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சரை விட சபாநாயகரே இவ்விடயத்தில் முக்கிய பங்கு வகிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, அனைத்து நாடுகளுக்கும் உரிய வகையில் கடவுசீட்டில் கவனம் செலுத்துமாறு கூறப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.