உலகின் முன்னணி மற்றும் பழமையான டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனமான ஐபிஎம் ஒருப்பக்கம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல திட்டங்களைத் தீட்டி வந்தாலும் மறுபுறம் வேறு வழியே இல்லாமல் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இதேவேளையில் ஐடி மற்றும் டெக் சேவை நிறுவன பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது, இதேவேளையில் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ரெசிஷன் வரும் என்ற அச்சமும் நிலவுகிறது.
இதற்கிடையில் ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான போர், ரஷ்யாவில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்களும் பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
சேலம், ஈரோடு-க்கு வரும் ஐடி, டெக் நிறுவனங்கள்..!!
ரஷ்யா
ரஷ்யாவில் இயங்கி வரும் வெளிநாட்டு நிருவனங்கள் அடுத்தது வெளியேறி வரும் நிலையில் இப்பட்டியலில் ஐபிஎம் நிறுவனமும் இணைந்துள்ளது. ரஷ்யாவில் இதுவரை கூகுள், ஸ்டார்பக்ஸ், மெக்டொனால்டு உட்படப் பல நிறுவனங்கள் வெளியேறியுள்ளது.
ஐபிஎம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவில் ஐபிஎம் அனைத்து வர்த்தக நடவடிக்கைகள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐபிஎம் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, ரஷ்யாவில் அனைத்து செயல்பாடுகளையும் மூடவிட்டு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது என்று ஊழியர்களுக்குத் தெரிவித்தார்.
அரவிந்த் கிருஷ்ணா
அரவிந்த் கிருஷ்ணா ஐபிஎம் ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ரஷ்யா உக்ரைனில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பைக் கவனிப்பதில் பல மாதங்களாக நிறுவனத்தின் கவனம் செலுத்தியது. ஐபிஎம் நிறுவனம் மார்ச் மாதத்தில் செயல்பாடுகளை நிறுத்தி இருந்தாலும் தொடர்ந்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.
இன்போசிஸ்
இதேபோல் ரஷ்யாவில் இயங்கி வந்த இன்போசிஸ் தனது வர்த்தகத்தை மொத்தத்தையும் மூடிவிட்டு வெளியேறியது. இந்தியா – ரஷ்யாவுக்கும் எந்த விதிமானப் பிரச்சனையும் வர்த்தகத் தடையும் இல்லாத வேளையில் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி மருமகன் ரிஷி சுனக்-க்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இன்போசிஸ் ரஷ்யாவில் இருந்து வெளியேற முடிவு செய்தது.
IBM closing Russian business completely; Employees were layoff
IBM closing Russian business completely; Employees were layoff ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் ஐபிஎம்.. ஏன்..? எங்கே..?