என்ன சொன்னார் சக்தி காந்த தாஸ்.. 10 முக்கிய விஷயங்கள்.. யாருக்கு என்ன பலன்..!

இன்று நடந்த மத்திய ரிசர்வ் வங்கி கூட்டத்தில் எதிர்பார்த்ததை போலவே வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

இது மட்டும் அல்ல, இந்த கூட்டத்தில் இன்னும் பல்வேறு அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அது என்னென்ன? இதனால் என்ன பிரச்சனை? என்ன பலன் வாருங்கள் பார்க்கலாம்.

ரூ.15000 வரை ஆட்டோ பேமெண்ட்.. இனி ஒடிபி தொல்லை இல்லை.. ஆர்பிஐ செம அறிவிப்பு..!

வட்டி அதிகரிப்பு

வட்டி அதிகரிப்பு

தற்போது ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், 4.90% ஆக அதிகரித்துள்ளது. இது ரஷ்யா உக்ரைன் பிரச்சனையால் ஏற்பட்டுள்ள பணவீக்கம், மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருமித்த கொள்கை நிலைப்பாடு

ஒருமித்த கொள்கை நிலைப்பாடு

பொருளாதார வளர்ச்சியினை ஆதரிக்கும் விதமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. அதேசமயம் பணவீக்கத்தினையும் கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜிடிபி எதிர்பார்ப்பு
 

ஜிடிபி எதிர்பார்ப்பு

2023ம் நிதியாண்டில் ஜிடிபி கணிப்பினை 7.2% ஆக மதிப்பிட்டுள்ளது. இதே கடந்த நிதியாண்டின் 4ம் காலாண்டு ரியல் ஜிடிபி விகிதம் 4.1% ஆகவும், இது மூன்றாவது காலாண்டில் 5.4% ஆகவும் குறைந்துள்ளது. இது ஓமிக்ரான் மத்தியில் தனியார் நுகர்வு சரிவினைக் கண்டுள்ளது. இது வளர்ச்சி சரிவுக்கு வழிவகுத்துள்ளது.

2023ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் – 16.2%

2வது காலாண்டில் – 6.2%

3வது காலாண்டில் – 4.1%

4வது காலாண்டில் – 4%

2023ம் நிதியாண்டு வளர்ச்சி – 7.2% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

பணவீக்கம் எதிர்பார்ப்பு

பணவீக்கம் எதிர்பார்ப்பு

பணவீக்கம் என்பது மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இது இந்தியாவின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் எனவும், இது மிக பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய சவாலாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஐ எதிர்பார்ப்பு

2023ம் நிதியாண்டில் – 6.7%

2023ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் – 7.5%

2வது காலாண்டில் – 7.4%

3வது காலாண்டில் – 6.2%

4வது காலாண்டில் – 5.8%

யுபிஐ கிரெடிட் கார்டு இணைப்பு

யுபிஐ கிரெடிட் கார்டு இணைப்பு

யுபிஐ பயனர்களுக்கு பயனளிக்கும் விதமாக, யுபிஐ தளத்துடன் கிரெடிட் கார்டுகளையும் இணைத்துக் கொள்ள அனுமதித்துள்ளது, இதன் மூலம் யுபிஐ பயனர்கள் ரூபே கிரெடிட் கார்டுகளில் இருந்து, யுபிஐ மூலம் பணம் செலுத்திக் கொள்ள முடியும். தற்போது இந்தியாவில் 26 கோடிக்கும் அதிகமாக தனிப்பட்ட பயனர்களும், 5 கோடி வணிகர்களும் இணைந்துள்ளனர். மே 2022ல் மட்டும் 594.63 கோடி பரிவர்த்தனை மூலம், 10.40 லட்சம் கோடி மதிப்பிலான தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது இன்னும் பண பரிமாற்றத்தினை எளிதாக செய்ய வழிவகுக்கும்.

சிஆர்ஆர்

சிஆர்ஆர்

ரொக்க இருப்பு விகிதம் (CRR ) என்பது வங்கிகளின் மொத்த வைப்புத் தொகைக்கு பதிலாக இருப்புகளில் வைத்திருக்க வேண்டிய இருப்பின் அளவாகும். இதன் மூலம் வெளிச்சந்தையில் புழங்காமல் தடுக்கும்போது பணப்புழக்கம் குறையும். வங்கி கடன் கிடைப்பது குறையும். இதனாய் தேவையும் குறையும். எனினும் தேவை குறையும்போது விற்பனையாளர்கள் விலையை குறைக்க வேண்டியிருக்கும். ஆக இது இயற்கையாகவே பணவீக்கத்தினை குறைக்க வழிவகுக்கும். இந்த விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை.

கூட்டுறவு வங்கிக்கு என்ன அறிவிப்பு

கூட்டுறவு வங்கிக்கு என்ன அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகள் இனி வீட்டுக் கடன் மற்றும் வர்த்தக ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு கடன் அளிக்கலாம் என அறிவித்துள்ளது. நகர்புற கூட்டுறவு வங்கிகளுக்கு வீட்டுக் கடனுக்கான வரம்பை இரட்டிப்பாக்கியுள்ளது. அதோடு நகரங்களில் இருக்கும் கூட்டுறவு வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு டோர் ஸ்டெப் வங்கி சேவை அளிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

எம் எஸ் எஃப் (MSF)

எம் எஸ் எஃப் (MSF)

ரிசர்வ் வங்கி அதன் மார்ஜினல் ஸ்டேண்டிங் ஃபெசிலிட்டி விகிதம் 5.15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது முன்பு 4.65% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்னிய செலவாணி கையிருப்பு

அன்னிய செலவாணி கையிருப்பு

இந்தியாவின் அன்னிய செலவாணி கையிருப்பு மே 27, 2022 நிலவரப்படி, 601.4 பில்லியன் டாலராக உள்ளது என அறிவித்துள்ளது.

இ-பேமெண்ட்ஸ்

இ-பேமெண்ட்ஸ்

ரெக்கரிங் இ- பேமெண்ட் அளவானது 5,000 ரூபாயில் இருந்து, 15,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது இபேமெண்ட் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

RBI monetary policy highlights: 10 key things to note from Reserve Bank MPC meet

The interest rate hike is as expected at today’s RBI meeting. The Reserve Bank has made various other announcements at this meeting. What is it? What is the benefit of doing so.

Story first published: Wednesday, June 8, 2022, 14:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.