தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தற்போதைய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூட பள்ளி கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த நிலையில், அதனை தற்போது மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 1 முதல் 5 வகுப்புகளை கையாள அதிக ஆசிரியர்கள் தேவை என்பதால் தொடக்கப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றம் செய்யப்படுவார்கள். மழலையர் வகுப்பில் உள்ள குழந்தைகளை கையாள்வதில்சிக்கல், புரிதலின்மையே நீடித்தது.
2013-14க்கு பின் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்காததால் ஓய்வுபெறும் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது. தொடக்க வகுப்புகளை கையாளும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 4,883 காலிப் பணியிடம் ஏற்பட்டது. 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்த ‘வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளனர்.