எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குநராக அலோக் குமார் சவுதரி நியமிக்கப்பட்டுள்ளார்.
1987-ம் ஆண்டு எஸ்பிஐ வங்கியில் ப்ரொபேஷ்னரி அதிகாரியாக பொறுப்பேற்ற அலோக் குமார், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்வாக இயக்குநர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
எஸ்பிஐ வங்கி தலைவர் தினேஷ் குமார் காராவுக்கு கீழ் இவர் நேரடியாக பணிபுரிவார். இவருடன் சேர்த்து எஸ்பிஐ வங்கியில் சுவாமிநாதன் ஜானகிராமன், சல்லா ஸ்ரீனிவாசுலு செட்டி மற்றும் அஸ்வினி குமார் திவாரி உள்ளிட்டவர்களும் நிர்வாக இயக்குநர்களாக உள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு இந்த நிர்வாக இயக்குநர் பொறுப்பில் அலோக் குமார் இருப்பார். இந்த பதவிக்காக 29 பொது மேலாளர்களை பின்னுக்குத்தள்ளி நேர்காணலில் வெற்றிபெற்றுள்ளார்.
முன்னதாக எஸ்பிஐ வங்கியில் நிதித் துறை துணை நிர்வாக இயக்குநர், சில்லறை தொழில் மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்ட பொறுப்புகளையும் அலோக் குமார் நிர்வகித்துள்ளார். இப்போது ஜூன் 7-ம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் பொறுப்பேற்றுள்ளார்.
எஸ்பிஐயின் சவுத்ரியுடன், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி ஆகியவையும் தங்கள் மூத்த தலைமைக் குழுவை மாற்றி அறிவித்துள்ளன.
கனரா வங்கியின் செயல் இயக்குநர் ஏ மணிமேகலை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு எம்டி மற்றும் சிஇஓவாக பொறுப்பேற்றுள்ளார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக அஜய் குமார் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த குப்தா சகோதரர்கள்.. தென் ஆப்பிரிக்காவையே கதி கலங்க வைத்த இந்திய தொழிலதிபர்கள்.. எப்படி?
Alok Kumar Choudhary appoints as SBI’s New MD From June 7
Alok Kumar Choudhary appoints as SBI’s New MD From June 7