கடவுச்சீட்டை ஒப்படைக்க தவறிய மகிந்த – நீதிமன்றில் அறிவிப்பு


நீதிமன்ற உத்தரவுக்கு அமைய முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட பல அரசியல்வாதிகள் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) ஆயிஷா ஜினசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த மாதம் 9ம் திகதி அமைதியான போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான நீதவான் விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடவுச்சீட்டை ஒப்படைக்க தவறிய மகிந்த - நீதிமன்றில் அறிவிப்பு

மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பலருக்கு பயணத் தடை

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, ரேணுகா பெரேரா மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட பலர் இதுவரையில் தமது கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ரேணுகா பெரேரா மற்றும் மஹிந்த கஹந்தகம ஆகியோர் தங்களுடைய கடவுச்சீட்டு தமது வீடு தீவைக்கப்பட்ட போது எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பலருக்கு பயணத் தடை விதித்து மே 12ம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

N4I8AN

நாடு முழுவதும் வெடித்த வன்முறை

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் அலரி மாளிகை என்பன முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 9ம் திகதி அரசாங்க ஆதரவாளர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதனையடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இதில் 10 பேர் கொள்ளப்பட்டதுன், 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.     

கடவுச்சீட்டை ஒப்படைக்க தவறிய மகிந்த - நீதிமன்றில் அறிவிப்பு



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.