பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வரும் ‘விக்ரம்’ திரைப்படத்தை சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பாராட்டி வரும் நிலையில், நடிகர்கள் சரத்குமார், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோர் படக்குழுவை பாராட்டி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
கமல்ஹாசனின் நடிப்பில் கடந்த 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம், 5 நாட்களாகியும் வசூலில் பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது. சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் என்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. அதேபோல், கமல்ஹாசனின் தீவிர ரசிகரும், ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 4-வது படம் என்பதால் ‘விக்ரம்’ படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வந்தது.
குறிப்பாக விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், சிறப்புத் தோற்றத்தில் சூர்யா என மல்டி ஸ்டார்கள் நடித்து இருந்ததால், நாளுக்கு நாள் ஹைப் ஏறிக்கொண்டு இருந்த நிலையில், படம் வெளியானதும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. பலதரப்பு ஆடியன்ஸையும் கவரும் விதத்திலேயே படம் எடுக்கப்பட்டிருந்ததால், திரையரங்குகளில் எப்போதும் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில், படக்குழுவை நடிகர்கள் சரத்குமார், சிவகார்த்திகேயன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விக்ரம்’ மிகப்பெரிய பிளாஸ்ட் என்று தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜின் இயக்கமும், அனிருத்தின் இசையும், அன்பறிவ்வின் சண்டைக் காட்சிகளும் மாஸாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஃபகத் ஃபாசில் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பும், சூர்யாவின் சர்ப்ரைஸ் காட்சிகளும் படம் முழுவதும் அற்புதமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்’ படத்தை இயக்கி பிரம்மாண்ட வெற்றி கொடுத்த இயக்குநர் ஷங்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவை பாராட்டி தள்ளியுள்ளார். இதேபோல் நடிகர் சரத்குமாரும், படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை மிக அற்புதமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
Extraordinary film,keeps you engrossed from start to finish and aches for more,stupendous performances @ikamalhaasan @VijaySethuOffl @Fahadh_Faasil @Suriya_offl ,congratulations and kudos to the entire team, @Dir_Lokesh the direction so seemless, presentation with gripping pace pic.twitter.com/zCLBc7kipc
— R Sarath Kumar (@realsarathkumar) June 7, 2022