புதுச்சேரி : காரைக்காலில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கோடை விழா நடத்தப்பட உள்ளது.சுற்றுலாத்துறை மற்றும் கலை -பண்பாட்டு துறை சார்பில், புதுச்சேரியில் கடந்த வாரம் நான்கு நாட்களுக்கு கோடை விழா நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, காரைக்காலில் கோடை விழா (காரைக்கால் கார்னிவல்) நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று சட்டசபை அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் நடந்தது.
கலை பண்பாட்டு துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, நாஜிம் எம்.எல்.ஏ., கலெக்டர் வல்லவன், அரசு செயலர்கள் நெடுஞ்செழியன், அருண் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், வரும் ஜூலை 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு காரைக்காலில் கோடை விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இவ்விழாவிற்கு கலெக்டர் தலைமையில் குழு அமைத்து காரைக்கால் கடற்கரை சாலை, பாரதியார் வீதியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்திட முடிவு செய்யப் பட்டது. காரைக்காலில் 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கோடை விழா நடத்தப்பட உள்ளது குறிப்பிடத் தக்கது.
Advertisement