கிரிப்டோ கரன்சி எனப்படும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மீதான வரிவிதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் சில வழிகாட்டல்களை வெளியிட உள்ளது.
ஜூலை ஒன்றாம் தேதி அமலாகும் வகையில் சில திருத்தங்களுடன் வழிகாட்டல்கள் வெளியாக உள்ளன. இதற்கான பணியில் மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் ஈடுபட்டுள்ளது.
இதனிடையே வரிவிதிப்பில் சில பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.