பெங்களூரு : ஹுஸ்கூர் – சர்ஜாபுரா சாலை சரியில்லாததை கண்டித்து, பயோகான் நிறுவனத்தின் முக்கியஸ்தர் கிரண் மஜும்தார் ஷா, ‘உள்ளூர் அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டும்’ என விமர்சித்துள்ளார்.பெங்களூரு நகரின் பல்வேறு சாலைகள் குண்டும், குழியுமாக இருப்பதை, கர்நாடக உயர் நீதிமன்றம் பலமுறை கண்டித்துள்ளது. மாநகராட்சியும் சில பள்ளங்களை மூடி, கண்துடைப்பு நடவடிக்கை எடுக்கிறது.இதனால், அடிக்கடி விபத்துகள் நடப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.
உலக தரத்துக்கு நகரை மேம்படுத்துவதாக அறிவித்துள்ள அரசு, சாலை சீரமைப்பு பணிகளை முறையாக செய்யவில்லை. நகரின் மையப்பகுதியில் மட்டுமே வளர்ச்சி பணிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் உள்ளது.இந்த வகையில், ‘பயோகான்’ நிறுவனத்தின் முக்கியஸ்தர் கிரண் மஜும்தார் ஷா, மக்கள் பிரதிநிதிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.’டுவிட்டரில்’ அவர் கூறியிருப்பதாவது:ஹுஸ்கூர் – சர்ஜாபுரா சாலை சரியில்லாத போது, பஸ் நிறுத்தம் அமைத்தது எதற்கு. எம்.பி., – எம்.எல்.ஏ., கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பின்மையால், விரக்தியும், கோபமும் ஏற்பட்டுள்ளது. அனைத்து உள்ளூர் அரசியல்வாதிகளும் வெட்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement