திருவனந்தபுரம்: இந்தியாவில் 3 மாத இடைவெளிக்கு பிறகு கொரோனா மெதுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இந்த மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது.இதற்கிடையே கேரளாவில் நேற்று நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது. அதன்படி நேற்று 2,271 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு பிறகு கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க கொரோனா தொற்று பாதித்து சிகிச்சையில் இருந்த 2 பேர் நேற்று மரணமடைந்தனர். எர்ணாகுளம் மாவட்டத்தில்தான் நேற்று மிக அதிகமாக 622 பேருக்கு நோய் பரவியது குறிப்பிடத்தக்கது.