பெங்களூரு : சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சொகுசு வசதி செய்து கொடுக்க, அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கு விசாரணை ஆகஸ்ட் 29க்கு ஒத்திவைக்கப்பட்டது.சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, அவரது அண்ணி இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர். அங்கு, அவர்களுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க, அதிகாரிகள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கில், சசிகலா, இளவரசி, பெங்களூரு ஊழல் ஒழிப்பு நீதிமன்றத்தில் மார்ச் 11ல் ஆஜராகினர்.
இருவரிடமும் பிணை பத்திரம் பெற்று, அவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. மேலும், நேரில் ஆஜராவதற்கு, ஏப்ரல் 16ல் நீதிமன்றம் விலக்கு அளித்தது.நீதிபதி லட்சுமி நாராயண பட் முன்னிலையில், நேற்று முன்தினம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே நேரில் ஆஜராவதற்கு விலக்கு பெற்றிருந்தால், சசிகலா, இளவரசி ஆஜராகவில்லை. சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் வராததால், விசாரணை ஆகஸ்ட் 29க்கு ஒத்திவைக்கப்பட்டது.
பெங்களூரு : சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சொகுசு வசதி செய்து கொடுக்க, அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கு விசாரணை ஆகஸ்ட் 29க்கு ஒத்திவைக்கப்பட்டது.சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.