மாரவில மற்றும் சிலாபம் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 91 பேர் சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாரவில விடுதியில் தங்கியிருந்த 13 ஆண்கள், 09 வயது சிறுவன் மற்றும் இந்த மோசடியுடன் சம்பந்தப்பட்ட ஒருவரும் முதலில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சிலாபம் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடி இழுவை படகை அவதானித்த கடற்படையினர், 58 ஆண்கள், 05 பெண்கள் மற்றும் 07 குழந்தைகள் மற்றும் மோசடி யுடன் சம்பந்தப்பட்ட 6 பேரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு, மாரவில, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கல்பிட்டி மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.