பெங்களூரு : ”சாம்ராஜ்பேட்டில் உள்ள ஈத்கா மைதானம், மாநகராட்சிக்கு சொந்தமானது,” என பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ஹரிஷ் குமார் தெரிவித்தார்.பெங்களூரு சிக்பேட்டில் உள்ள, ‘ஈத்கா மைதானம்’ பெங்களூரு மாநகராட்சிக்கு சொந்தமானது. இங்கு குறிப்பிட்ட சமூகத்தினர் பிரார்த்தனை நடத்த அனுமதிக்க கூடாது, என, ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி, சனாதான் சன்ஸ்தான் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இது குறித்து, மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ஹரிஷ் குமார் கூறியதாவது:சிக்பேட்டில் உள்ள ஈத்கா மைதானம், பெங்களூரு மாநகராட்சிக்கு சொந்தமானது. மாநகராட்சி மேற்கு மண்டல இணை கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ளது. அவரிடம் பேசியுள்ளேன். இந்த மைதானத்தை, ஆண்டுக்கு இரண்டு முறை பிரார்த்தனைக்கு பயன்படுத்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுமதி
இணை கமிஷனரிடமிருந்து அனுமதி பெற்று அங்கு நிகழ்ச்சிகள் நடத்தி கொள்ளலாம். இது, ‘ஈத்கா மைதானம்’ என்பதற்கான ஆவணங்கள் எதுவுமில்லை. இங்கு நிகழ்ச்சிகள் நடத்த விரும்புவோர், மாநகராட்சியை அணுகலாம். முறைப்படி அனுமதி அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி செய்தி தொடர்பாளர் மோகன் கவுடா கூறுகையில், ”இம்மைதானம் குறித்து மாநகராட்சி தெளிவுபடுத்தி உள்ளது. ”குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டும் அனுமதி தராமல், அனைத்து சமுதாயத்தினருக்கும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.”சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, இம்மைதானத்தில் யோகா நடத்தவும், 75ம் ஆண்டு சுதந்திர தின விழா, விநாயகர் சதுர்த்தி கொண்டாடவும், ‘அனைத்து ஐக்கிய ஹிந்து சங்கங்கள்’ மாநகராட்சியிடம் அனுமதி கேட்க உள்ளன,” என்றார்.
Advertisement