ஜனவரி 1 முதல் நிலக்கரி பயன்படுத்த கூடாது.. டெல்லிக்கு உத்தரவு..!

2023ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் தொழில்துறை, உள்நாட்டு மற்றும் பிற இதர நிறுவனங்கள் நிலக்கரியை பயன்படுத்த கூடாது என நிலக்கரிக்கு தடை செய்து காற்று தர மேலாண்மை ஆணையம் CAQM (The Commission for Air Quality Management) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இருப்பினும், அனல் மின் நிலையங்களில் குறைந்த கந்தக நிலக்கரியை பயன்படுத்தலம் என தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி – என்சிஆர் பகுதியில் தொழில்துறை பயன்பாடுகளில் ஆண்டுதோறும் சுமார் 1.7 மில்லியன் டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. ஆறு முக்கிய தொழில்துறை மாவட்டங்களில் மட்டும் சுமார் 1.4 மில்லியன் டன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

Work From Home நிரந்தரமாக்கப்படுமா? நாஸ்காம் அறிக்கை சொல்வது என்ன?

நிலக்கரி

நிலக்கரி

ஜூன் 3 ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில், நிலக்கரி பயன்படுத்துவதற்கான தடை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் PNG உள்கட்டமைப்பு மற்றும் விநியோகம் உள்ள பகுதிகளிலும், 2023ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் PNG விநியோகம் இல்லாத பகுதிகளிலும் அமலுக்கு வரும் என்று CAQM தெரிவித்து இருந்தது.

டெல்லி-என்.சி.ஆர்

டெல்லி-என்.சி.ஆர்

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டெல்லி – என்சிஆர் முழுவதும் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பொது மக்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களிடம் இருந்து ஆலோசனைகளை பெற்றே இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காற்று மாசு
 

காற்று மாசு

டெல்லி-என்சிஆர் பகுதியில் காற்று மாசு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் நடந்த பல்வேறு கட்ட ஆலோசனையில் நிலக்கரியை தடை செய்வது தொடர்பாக ஏராளமான ஆலோசனைகள் பெறப்பட்டன. இந்த ஆலோசனைகளை பரிந்துரை செய்யவும், இதுகுறித்து ஆய்வு செய்யவும் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

நிபுணர் குழு

நிபுணர் குழு

இந்த நிபுணர் குழுவின் அறிக்கையில் ‘நிலக்கரி போன்ற அதிக மாசுபடுத்தும் எரிபொருட்களை படிப்படியாக அகற்றவும், முடிந்தவரை தூய்மையான எரிபொருட்களை பயன்படுத்தவும் பரிந்துரை செய்துள்ளது.

தடை

தடை

டெல்லியில் நாளுக்குநாள் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் மக்களின் உயிரை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நடவடிக்கையை தொழில்துறையினர் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் முழு ஆதரவு தர வேண்டும் என்றும் CAQM கேட்டு கொண்டுள்ளது. மேலும் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக பல்வேறு பிரச்சினைகள் வருவதை அடுத்தே இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் CAQM தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Air quality panel bans use of coal in Delhi-NCR from January 1, 2023

Air quality panel bans use of coal in Delhi-NCR from January 1, 2023 | ஜனவரி 1 முதல் நிலக்கரி பயன்படுத்த கூடாது: காற்று தர மேலாண்மை ஆணையம் உத்தரவு

Story first published: Wednesday, June 8, 2022, 17:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.