ஜேர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள தேவாலயத்திற்கு வெளியே மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.
இன்று காலை மேற்கு பெர்லினில் கடைகள் மற்றும் கஃபேக்கள் நிரம்பிய Rankestrasse தெருவில் சில்வர் நிற ரெனால்ட் கார் ஒன்று மக்கள் கூட்டத்தின் மீது சென்று சொருகிறது.
சாலையில் படு வேகமாக வந்துகொண்டிருந்த அந்த கார், நடைபாதையைக் கடந்து திடீரென அங்கு கூடி அமர்ந்திருந்த மக்கள் கூட்டத்தை துளைத்துக்கொண்டு காபி கடைக்குள் மோதி நின்று பெரும் விபத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்து கைசர் வில்ஹெல்ம் நினைவு தேவாலயத்திற்குப் பக்கத்தில் நடந்தது.
Picture: AP
சம்பவம் நடந்த ஒரு சில நிமிடங்களில் பொலிஸ் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் 60 வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் வந்தன. பல கனரக ஆயுதம் ஏந்திய அதிகாரிகள் அப்பகுதிக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர்.
Picture: @scottmale metrograb
விபத்துக்கு கணமான Renault Twingo ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறினாலும், விபத்து வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
2016-ல் 11 பேர் கொல்லப்பட்ட பெர்லினின் கிறிஸ்மஸ் சந்தை தாக்குதலின் இடமான Breitscheidplatz-க்கு அருகிலுள்ள Rankestrasse-ல் இந்த சம்பவம் நடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.